இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப் படைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் அறிவித்து வருகின்றனர் அறிவித்து வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 39தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு முடித்து திமுக போட்டியிடும் 21பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல் அருகே மாநகர செயலாளரும், திருச்சி மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வன், திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மேளதளத்துடன், மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அருண்நேரு பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக தலைவர் எண்ணை அறிவித்துள்ளார்.இது பெரிய பொறுப்பும், வாய்ப்புமாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தலாக உள்ளது. ஒன்றிய அரசும், சுற்றி உள்ள அரசுகளும் தமிழகத்தில் திராவிட மாடல்களை கண்டு பொறாமை பட்டு நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த தேர்தல் மக்களுடைய உரிமை காப்பதற்காகவும், தமிழகத்திற்கு வரவேண்டிய எல்லா வளங்களும் பெற்று தர வேண்டும் என்பதற்கான முக்கியமான தேர்தலாக உள்ளது.

இது இளைஞர்களுக்கான பெரிய வாய்ப்பு எல்லாம் இளைஞர்களுக்காக நான் போட்டியிடுவது பெருமையாக உள்ளது. அவர்கள் நினைப்பது நான் சாதிப்பேன்.40தொகுதியிலும் தலைவர் இருப்பதாகவே கருத வேண்டும் என கூறியுள்ளார். இப்போது நாங்கள் வெறும் கருவியாக தான் உள்ளோம். எல்லோருக்கும் தொகுதியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கொடுக்க உள்ளோம். பெரம்பலூருக்கு ரயில் நிலையம் கொண்டு வருவதற்காக பணியில் துரிதப் படுத்துவதற்கு முக்கியம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.இது தொடர்பாக தலைவர் கடிதம் எழுதி உள்ளார். ரயில் நிலையம் திட்டத்தை செயல்படுத்துவோம். மிக முக்கியமான விஷயங்களாக சுகாதாரமும், வேலை வாய்ப்பு உள்ளது. சுகாதாரத்திற்கு என்ன திட்டம், வேலை வாய்ப்பு என்ன திட்டம்,அது நாளை வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் தலைவர் தான் ஹீரோ. அனைவரிடமும் கேட்டு அதன் அடிப்படையில் திட்டமிடுதலோடு வந்துள்ளது. தேர்தல் அறிக்கை மக்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளது. தேர்தல் அறிக்கைகள் கட்டாயமா செய்ய முடியும் என்ற தலைவர் கூறியுள்ளார்.இந்தியா கூட்டணி வெற்றி பெற்று அனைத்தும் செய்யப்படும்என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *