பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியாரின் 48- வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரான கதிரவன் மற்றும் திமுக நிர்வாகிகள் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதை புகைப்படம் எடுத்து எம்எல்ஏ கதிரவனின் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்  “தந்தை பெரியாரின் 48-வது நினைவுநாள் என்பதற்கு பதிலாக “பிறந்த நாள்” என தவறாக குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரது சமூக வலைதள ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள அவரது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பிறந்தநாள் அல்ல நினைவுநாள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கதிரவன் உலகம் போற்றும் மிக பெரிய தலைவரான தந்தை பெரியாரின் நினைவு நாள் எது? பிறந்தநாள் எது? என்பது கூட சரியாக தெரிந்து வைத்துக்கொள்ளாமல் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டு இருப்பது தற்போது பொதுமக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்