திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு 25 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குளிர்பானங்கள் முதலில் கண்ணாடி பாட்டிலிலும், 2017-ல் பெட் பாட்டிலிலும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது மற்றொரு அறிமுகமாக பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலிசோடா குளிர்பானங்கள் அறிமுக விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் ஹோட்டல் ரம்யாஸில் இன்று நடந்தது.

விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். கிருஷ்ணா பேவரேஜஸ் உரிமையாளர் ஜானகி ரவிச்சந்திரன், ஹரிபிரசாத் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். புதிய அறிமுகமாகும் கோலிசோடா கண்ணாடி பாட்டில் முதல் விற்பனையை அரியலூர் ஊட்டி அத்வா புராடக்ஸ் பி.சக்திவேல் பெற்றுக்கொண்டார். அதோபோல் திருச்சி சாய்சின்னு எண்டர்பிரைசஸ் பெட் பாட்டில் கோலிசோடா முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், இளைஞரணி திருமாவளவன்.சரண் பாலாஜி, விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவரும் வி.ஜெ.ஆர்.எண்டர் பிரைசஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.கிருஷ்ணன், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரிய மாவட்டங்களுக்கு ஏரியாவாரியாக ஏஜெண்டுகள் தேனவ என்றும், தரமான குளிர்பானங்களை வழங்கிவரும் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து தரவேண்டுகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *