பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.‌ தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை காசோலையாக சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி,நகர. பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.அன்பில் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில்,

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, மாவட்ட மீனவர் அணி பொருளாளர் சரவணன் மற்றும் வட்டச் செயலாளாகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி , பேரூர், வட்ட , சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மகளிர் அணி மாநில செயலாளர் ரொகையா ஆகியோர் மாலை அணிவித்தனர். இதில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, வட்ட மற்றும் மாநகர பகுதி, வட்ட நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் ஏ எம் ஜி விஜயகுமார், விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *