திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். கடந்த 1/12/22 அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது அதில் ஒரு பகுதியாக வரும் 16 12 2022 அன்று தலைமைக் கழகம் அறிவித்தபடி திருவெறும்பூர் தொகுதியில் அரியமங்கலம் பகுதியிலும் மணப்பாறை தொகுதியில் மணப்பாறை நகர கழகம் அக்ரகாரத்திலும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் கிழ்கன்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் திருச்சி தெற்கு மாவட்டத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியினை ஏற்றி வைத்து எங்களுக்கு பெருமை சேர்த்த கழக தலைவர் – தமிழக முதல்வர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கின்றது. திருச்சி தெற்கு மாவட்டத்தில் பொது உறுப்பினர் கூட்டத்தை திமுக வரலாற்றில் இடம் பெரும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக நடத்திய எங்கள் மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக இக்கூட்டம் தெரிவிக்கின்றது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைகாரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது நான் கலைஞரின் தோழன், இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும் என்று தன்னை பிரகடனபடுத்தி அதன்படியே வாழ்ந்து கொள்கை உணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டியிருக்கும், இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக அமைப்புகளின் சார்பில் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும், கழக கொடியினை ஏற்றியும் புகழ் அஞ்சலி செலுத்துவது என்று இக்கூட்டம் முடிவு செய்கின்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே என் சேகரன் வண்ணைஅரங்கநாதன் பி எம் சபியுல்லா தொகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *