திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க க்கோரி சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் காசிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், டெல்டா மண்டல விவசாயிகள் அணி செயலாளர் அந்தோணி முத்து மற்றும் மாநில  மகளிர் அணி செயலாளர் கிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிநீர், சாக்கடை தூர்வாருதல் மற்றும் இதர நடவடிக்கை செய்யாமல் உள்ளதற்கு பல முறை மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் சிறுகமணி பேரூராட்சி நிர்வாகத்தில் சர்வே எண் 221/3ல் உள்ள ஆதிதிராவிடர் நல சட்டத்தின்படி கையகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலத்தில் அங்கீகாரம் இன்றி வீட்டுமனையாக பிரித்து அந்த இடத்தில் கட்டிட அனுமதியின் வீட்டு வரி ரசீது வழங்கியுள்ளது.

இதனால் வீடுகளுக்கு மூடி முத்திரையிடுதல் சம்பந்தமாக தமிழ்நாடு உள்ளாட்சி முறை மன்றம் ஆணை உத்தரவிட்டும் உத்தரவை நடைமுறைப்படுத்தாத திருச்சி மண்டல பேரூராட்சி உதவி இயக்குனரகம் உதவி இயக்குனர் மற்றும் சிறுகமணி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *