நீர்மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடுவதை கைவிட வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். ரயில்வே, எண்ணெய் நிலக்கரி, விமானம் கப்பல் துறை, நெடுஞ்சாலைத்துறை, தேசிய எரிவாயு பைப்லைன் நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு கொடுத்து பொதுத் துறைகளை அளிப்பதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெருநகர் வட்டம் சார்பில் வியாழனன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட துணை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஸ்ரீரங்கம், மன்னார்புரம், லால்குடி, முசிறி, துறையூர், மணப்பாறை மின்வாரிய அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.