சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தோகா செல்வதற்காக இன்று மாலை 04.40 மணி அளவில் வாலிபர் ஒருவர் வேகமாக திருச்சி விமான நிலையம் வந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை வாங்கி ஆய்வு செய்த பொழுது, அவரது பாஸ்போர்ட்டில் முகமது அலி என்றும் தகப்பனார் பெயர் அகமது கரீம், விலன் தெரு அறந்தாங்கி புதுக்கோட்டை என்ற போலி பெயர் மற்றும் முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்று பயணம் செய்ய இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணையில் அவரின் உண்மையான பெயர் ஹைதர் அலி வயது 52, என்பதும் தகப்பனார் பெயர் அப்துல் கரீம், 7./24 மெயின் ரோடு துறவிக்காடு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 11.6.2021ம் தேதியன்று தோகாவிலிருந்து வந்த நிலையில் மீண்டும் இன்று மாலை தோகா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஹைதர் அலியை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *