திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ராஜ் பாஸ்கர் என்பவர் தனது பங்குதாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;-

நான் சங்கிலியாண்டபுரம் பகுதியில் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளேன். மேலும் மருத்துவமனையின் நலனுக்காக பல்வேறு இடங்களில் எனது பெயரில் கடன் வாங்கி மருத்துவமனையை நடத்தி வந்தேன். கொரோனா காலத்திலும் அதிக மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தேன். அப்போது ரமேஷ் என்பவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவர் எங்கள் மருத்துவமனையுடன் பங்குதாரராக சேர்ந்து. அவர் பங்காக பணம் எதுவும் செலுத்தாமல் புதிய மருத்துவ உபகரணங்கள் என்று கூறி பழைய மற்றும் சேதமடைந்த உபகரணங்களை மருத்துவமனைக்கு அவருடைய பங்கிற்காக கொடுத்தார். மேலும் அவர் பங்கிற்கு கொடுத்த உபகரணங்கள் அனைத்துமே சேதமடைந்து விட்டது அதனை பயன்படுத்த முடியாமலும் மற்றவைகள் அனைத்தும் அடிக்கடி பழுது அடைந்து வந்தது.

இது குறித்து கேட்கும்போதெல்லாம் சரி செய்து கொடுப்பதாக காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் பல உபகரணங்களை சரி செய்து கொடுக்கவில்லை மேலும் கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனையில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்பதால் அவரின் குடும்ப தேவைக்காக தொழில் தேவைக்காகவும் பணம் தேவை என்பதாலும் மருத்துவமனையின் பங்குதாரர்களில் இருந்து அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டு விருப்பப்படியே மருத்துவமனையை விட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இதுபோன்ற கஷ்டமான சூழ்நிலையிலும் நான் மருத்துவமனையை வெற்றிப்பாதையில் தற்போது நடத்திக் கொண்டிருக்கிறேன். இதை கண்டு பொறாமை கொண்ட அவர் என்னை பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் மருத்துவமனையை நடத்த முடியாது என்று மிரட்டியும் வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை எனது மருத்துவமனையில் நான் இல்லாத நேரம் பார்த்து உள்ளே புகுந்து சிகிச்சையில் இருந்த நோயாளிகளை வெளியே விரட்டி விட்டு மருத்துவமனையின் லேப் ரூம் எமர்ஜென்சி வார்டு உள்ளிட்ட பகுதிகளை பூட்டி விட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் இன்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளேன் மேலும் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *