திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் ரோந்து வாகனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களின் தரப்பரிசோதனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களின் வாகனங்கள், ரோந்து டூவீலர், ‘பேட்ரோல்’ வாகனம் உட்பட வாகனங்களை மாதந்தோறும் தரப் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, போலீஸ் டி.எஸ்.பி.,கள், ‘பேட்ரோல்’ வாகனம், ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் தகுதி குறித்து திருச்சி போலீஸ் எஸ்.பி. மூர்த்தி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் வாகனங்களின் தகுதி, உதிரிபாகங்களின் நிலைமை உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டனர்.