திருச்சி விமான நிலையம் அண்ணா நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் 50. இவர் கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததைத் தொடர்ந்து இவர் இரண்டாவதாக செல்வி 45 என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். செல்வியும் மோகன் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றவர். செல்வத்தின் முதல் மனைவிக்கு ஒரு மகனும், செல்வத்தின் இரண்டாவது மனைவிக்கு ஏற்கனவே திருமணமாகி உயிரிழந்த கணவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வத்தின் முதல் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யாமல் தனக்கு பிறந்த முதல் மகனுக்கு செல்வி திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளார். இதுகுறித்து செல்வம் பலமுறை கூறியும் இதை கண்டுகொள்ளாத செல்வி திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததை அறிந்து இன்று காலை 11 30 மணியளவில் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்வியை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வியை அரிவாளால் வெட்டிய கணவர் செல்வம் தப்பித்து சென்றதை அறிந்து ஏர்போர்ட் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்