திருச்சி பெரிய கடைவீதி

கள்ள தெருவில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவர் மகளிர் சுய உதவி குழு நடத்திவருகிறார். இவரிடம் திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்பவர் மகளிர் குழு பெண்களுக்கு லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார், மேலும் கந்தர்வகோட்டை சேர்ந்த கீதா மற்றும் திருச்சி புத்தூர் வடக்கு துரோபதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் முருகானந்தம் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். முருகானந்தம் அவர்கள் தொழிலதிபர் என்றும் பல தொழில் செய்து வருவதாகவும் இவர்கள் இருவரும் பல பேருக்கு லட்சக்கணக்கில் லோன் வாங்கி தருவதாகவும் தெரிவித்தனர். ராஜ ராஜேஸ்வரி என்பவர் மேற்கண்ட நபர்கள் இருவரும் பலபேருக்கு குறைந்த வட்டியில் மாதத் தவணை முறையில் கோடிக்கணக்கில் லோன் வாங்கி கொடுத்திருப்பதாகவும், ரூபாய் ஐம்பதாயிரம் கட்டினால்

10 லட்சம் கடன் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை காட்டினார். இதை நம்பி மகாலட்சுமியும், அங்கம்மாள், பேபி சரோஜா, சாந்தி, சித்ரா, கமருனீஷா, ரஹானா மற்றும் பத்மினி ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 60 நபர்களிடம் ரூபாய் 17000/- வீதம் ஆக மொத்தம் 10,20,00/- ரொக்கத்தை வசூல் செய்து அதில் ரொக்கமாக 9,70,000/- மட்டும் ராஜராஜேஸ்வரி எங்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். மேலும் முருகானந்தம் வங்கிக் கணக்கில் சுமார் 50,000/- பணம் செலுத்தி உள்ளார்கள். ஆக மொத்தம் 10,20,000/-. மேலும் இவர்களிடமிருந்து வங்கி கணக்குகள் ஆதார் அடையாள அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், நிரந்தர வருமானத்தை நகல் மற்றும் பூர்த்தி செய்யப்படாத ரூ 20/- பத்திரம் மற்றும் தனிநபர் புகைப்படம் ஆகியவற்றை ராஜராஜேஸ்வரி பெற்றுக்கொண்டார்.

பணத்தை பெற்றுக் கொண்ட ராஜேஸ்வரி 15 நாட்களுக்குள் அவர்களது சேமிப்பு வங்கி கணக்கில் தலா ரூபாய் 10,00,000/- கடன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மேற்படி கடன் தொகையை மாத தவணை முறையில் ரூ 3500/- வீதம் நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அவர்கள் கூறியது போல் எந்த பணமும் கால அவகாசம் முடிந்தும் இவர்களுக்கு பணம் வரவில்லை இதுகுறித்து இராஜராஜேஸ்வரியிடம் சென்று நேரிலும் போனிலும் பலமுறை சென்று கேட்டதற்கு வீணாக சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார். எனவே 3.8.2021 அன்று காலை 11 மணியளவில் ராஜராஜேஸ்வரி வீட்டிற்கு நேரில் சென்று கேட்டபோது அவர் மரியாதை இல்லாமல் இவர்களை கீழ்தரமான வார்த்தைகளை உபயோகித்து, பணத்தை திருப்பித் தர முடியாது என்றும் திட்டியுள்ளார். அதையும் மீறி மறுபடியும் வந்து அடிக்கடி தொல்லை செய்தால் என் கணவரிடமும் மகன்கள் அசோக் மற்றும் பரத்திடம் சொல்லி உங்கள் எல்லாரையும் அடித்து உதைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ராஜராஜேஸ்வரியின் மகள் ஹரிப்பிரியா என்பவர் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்து எங்களை ஏளனமாக பேசி திட்டி மிரட்டி உங்களையெல்லாம் நான் நினைத்தால் ஐந்து நிமிடத்தில் ஜெயிலில் தள்ளி விடுவதாகவும் எங்களுக்கு காவல்துறையின் ஆதரவு இருப்பதாகவும் மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து நாங்கள் அவ்விடம் விட்டு வந்து விட்டோம். ஆகையால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் எங்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வரும் ராஜராஜேஸ்வரி, கீதா, முருகானந்தம் மற்றும் எங்கள் மீது மிரட்டல் விடுத்த ஹரி பிரியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மேலும் தங்களை ஏமாற்றிய பணத்தை திருப்பி வாங்கி தரும்படி கோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்‌ புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *