திருச்சி வ.வே.சு ஐயர் நினைவு இல்லத்தில் உள்ள வரகனேரி கிளை நூலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் என்கிற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூபாய் ஒரு இலட்சம் பெற்ற மாணவி சுகிதாவை பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

மேலும் சுகித்தா பேசுகையில் திருச்சியின் அடையாளமான வ.வே.சு.ஐயர் பிறந்து வளர்ந்த இந்த இல்லத்தில் அவர் நினைவாக இயங்கி வரும் இந்த அரசு நூலகத்தில் ரூபாய் ஆயிரம் கட்டி தன்னையும் புரவலராக இணைத்துக் கொள்ளுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கூறினார்.

உடன் என்கிரிஷ் அறக்கட்டளை வரகனேரி ரவிச்சந்திரன், நூலகர் செந்தில்குமார், பேராசிரியர் முனைவர் அசோகன்,முனைவர் அருணா, ஆசிரியர் மாரிமுத்து மற்றும் என்கிரிஷ் அறக்கட்டளை நிர்வாகி சதீஸ் சுகன்யா மற்றும் வாசகர் வட்டத்தினர் பொதுமக்கள், மாணவ மாணவிகள். கலந்து கொண்டு பாராட்டினார்கள் விழாவில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இறுதியாக பட்டி மன்றம், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் மற்றும் ஓவியம் வரைந்த மாணவிகள் அனைவருக்கும் ரவிசந்திரன் சார்பாக திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *