திருச்சி துறையூர் கொத்தம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பானுமதி இவரது மகள் நிஷா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது15 கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நிஷாவை தேடிவந்த காவல்துறையினர் துறையூரை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவருடன் இருப்பதாக தகவல் வந்தது.லோகேஸ்வரன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து போலிஸார் சிறுமியை மீட்டனர். போலீசாரிடம் சிறுமி கொடுத்த வாக்குமூலம்.தன் தந்தை ஆனந்த் என்பவர் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தந்ததாகவும் அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி தனது அத்தை மகளான லாவண்யா மற்றும் அவரது கணவர் யாழினராஜ் ஆகியோருடன் தஞ்சம் அடைந்ததாகவும் கூறினார். மேலும் அங்கு லாவண்யாவின் ஆண் நண்பர் லோகேஸ்வரன் என்பவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் லோகேஸ்வரன் மற்றும் சிறுமியின் தந்தை ஆனந்த் என்பவரையும் அதற்கு உடந்தையாக இருந்த லாவண்யா மற்றும் அவரது கணவர் யாழின்ராஜ் ஆகியோரைகாவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்