திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வணிகவரித் துறை அலுவலக ஊழியர் அமிர்தலிங்கம் இவரது மனைவி விஜயலட்சுமி இன்று காலை திருச்சி கலெக்டர் சிவராசிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தனர்

அந்த மனுவில் கூறியிருப்பதாவது;

எங்களின் இரண்டாவது மகள் ரம்யா ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிமுத்து மகன் குமரகுருபரன் என்பவரை கடந்த 2010ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நாங்கள் மகளுக்கு வரதட்சணையாக 40 பவுன் தங்க நகைகளை கொடுத்தோம். தற்போது எங்களின் மகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் குமரகுரு சிங்கப்பூருக்கு சென்று விட்டார் இதற்கிடையே என் மகளின் மாமனார் மாரிமுத்து அடிக்கடி ரம்யாவிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 9 2021 அன்று எனது மகள் அவரது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக மாமனார் மாரிமுத்து தெரிவித்தார். எங்கள் மகள் ரம்யா தூக்கில் தொங்கும் போது அதனை குமரகுருபரன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக எங்களது பேரன் எங்களிடம் தெரிவித்தார். மேலும் சுயநினைவு இல்லாத தருணத்தை பயன்படுத்தி பல வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். மகள் சாவில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தோம். ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்த புகாரை அவர் வாங்க மறுத்துவிட்டார். மேற்படி மகளின் செல்போன் எங்கு உள்ளது என்று கேட்டபோதும் போலீஸ் தரப்பில் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. ஆகவே எங்கள் மகளின் சாவுக்கு காரணமான அவரது கணவர் குமரகுரு மாமனார் மாரிமுத்து மற்றும் உறவினர் நாகராஜ் ஆகியோரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும. மேலும் குமரகுருபரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மகள் ஏற்கனவே கூறியுள்ளார். மகள் சாவில் எங்களுக்கு பலத்த சந்தேகம் உள்ளது. மேலும் குமரகுரு தரப்பினர் எங்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எங்கள் பேரக் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கருதுகிறோம் .இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *