பித்ருக்களின் முக்கிய நாளான அம்மாவாசைக்கு முன் வருவது மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் இல்லத்தில் கூடும் நேரமே மகாளயபட்சம் ஆகும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய பெளர்ணமி திதிக்கு மறுநாளிலிருந்து அமாவாசை வரை உள்ள காலம் மகாளயபட்ச காலம் ஆகும். மகாளயபட்சமான இந்த 15 நாட்களிலும் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்கள் சந்ததியினருடன் தங்கி, உணவு அருந்துகின்றனர் என நம்பப்படுகிறது.

 அத்தகைய சூழ்நிலையில் முன்னோர்களின் ஆத்ம திருப்திக்காக இந்த நாட்களில் சிரார்த்தம், தர்ப்பணம் மற்றும் தானம் செய்தல் போன்றவை அவசியமாகும்.முன்னோர்களின் ஆசியை பெற்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும். முன்னோர்களின் ஆசி வாழ்க்கையில் வெற்றியையும், செல்வத்தையும் தேடி தரும். மகாளயபட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியை போக்குவதோடு, பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கும் உணவு கொடுப்பதனால், நம்முடைய பல தலைமுறையினருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக சந்ததிகளின் வாழ்க்கையில் இருக்கும் தடை மற்றும் துன்பங்கள் என அனைத்தும் நீங்கும். மகாளயபட்சத்தில் ஏழை, எளியோர் மற்றும் பிராமணர்களுக்கு அன்னதானம் கொடுப்பதோடு, ஆடைகளையும் தானம் செய்ய வேண்டும். வேட்டி, துண்டு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம். மகாளயபட்ச காலத்தில் கருப்பு எள்ளை தானம் செய்வதன் மூலம் அனைத்து தடைகளிலிருந்தும் விடுதலை பெறலாம். இதுமட்டுமின்றி கிரகங்களினால் ஏற்படும் தடைகள் விலகும். மேலும், நெருக்கடிகள் நீங்கும் என்பது ஐதீகம்

இத்தகைய முக்கியம் வாய்ந்த மஹாளயா அமாவாசையான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பல்லாயிரக்கண பொதுமக்கள் திருச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்து தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து ஏழைகளுக்கு உணவு வழங்கினர்.மகாளய அமாவாசையான இன்று பொதுமக்கள் பாதுகாப்பு வகையில் அம்மா மண்டபம் படித்துறை மற்றும் அம்மா மண்ட சாலை, ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் காவல்துறையினரும் தீயணைப்பு துறைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்பட்டாலும் தண்ணீரில் சென்று பிண்டங்களை கரைக்கும் பொது மக்களுக்கு தீயணைப்பு துறை எனும் எச்சரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *