திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் திருவானைக்காவல் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை எரிசக்தி துறை, மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகிய துறைகளை சார்ந்த தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *