சற்றுமுன் ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் ஒருவர் இருசக்கரவாகனம் ஓட்டிச் செல்லும் போது இரு சக்கரவாகனம் கண்ணாடியில் ஏறி நின்றபடி படம் எடுத்து சீரிய கட்டு விரியன் பாம்பால் பரபரப்பு ,

ஸ்ரீரங்கம் தாலுகா ஏகிரி மங்கலத்தை சேர்ந்த வாசுகி என்ற இளம் பெண் தன் உறவினரை பார்க்க ஸ்ரீரங்கம் வந்துள்ளார் , சுப்பிரமணியபுரம் பகுதியில் வண்டியில் சென்ற போது கண்ணாடி மீது நின்ற பாம்மை கண்டு அலறி வண்டியில் இருந்து இறங்கினார் அப்போது அருகில் நின்றவர்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர் . தீயணைப்பு நிலை அலுவலர் சேகர், ஏட்டுகள் மூர்த்தி , குணசேகரன் , தீயாமணி கண்டன் , சுரேஷ் , பசுபதி ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 1 1/2 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்துச் சென்றனர் .

பொது மக்களே உஷாராக இருங்கள் கோடை காலம் வந்துவிட்டதால் விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து குளிர்ந்த இடம் நோக்கி செல்ல தொடங்கும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் வீடுகளில் உள்ள இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் காலணிகளை சரிபார்த்த பிறகு உபயோகப்படுத்துங்கள் இல்லையென்றால். இது போன்ற விஷ ஜந்துக்களிடம் மாட்டிக் கொள்ள நேரிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்