மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி உழவர் சந்தையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் இருவரின் நினைவிடங்களில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மறைந்த தியாகிகளுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த தியாகிகள் ஊர்வலத்திற்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவா ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினர். மாவட்ட பொருளாளர் சரவணன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொருளாளர் சுரேந்திரன், சமூக நீதிப் பேரவை நிறுவனர் ரவிக்குமார். ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக சைனி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தோழமை அமைப்புகள், கட்சிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் இந்தி திணிப்பிற்கு எதிராகவும் 10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கருத்தரங்கம் நடைபெற்றது.