திருச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை அரசு அதிகாரிகள் மூலம் நிறைவேற்றி வருகிறார்.

கோரிக்கை அடங்கிய மனுக்களை அமைச்சிடம்  வழங்கிய பொதுமக்கள்

அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மலைக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட 8 வது வார்டு பாரதியார் தெருவில் நடைபெற்ற பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மதிவாணன், வட்டச் செயலாளர் தசரதன், நிர்வாகிகள்
ஆர்.எம்.எஸ்.பாலு, தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மனு அளித்த பெண்கள் அமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்

மனு அளித்த பெண்கள் அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக கம்மாள தெரு முயல் மார்க் திருமண மண்டபத்திலும், 18-வது வார்டு மற்றும் 23-வது வார்டு பகுதிகளான பாலக்கரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வளாகத்திலும், மற்றும் 43-வது வார்டு பகுதியான கல்லுக்குழி பகுதியில் நடைபெற்ற பொது மக்களிடம் மனுக்கள் பெரும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சரிடம் அளிக்க வந்த பொதுமக்கள்

பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதில் எம்எல்ஏ இனிக்கோ,பகுதி செயலாளர் மதிவாணன், வட்டச் செயலாளர் சுருளிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.