மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக உலக பூமி தினம், உலக புத்தகம் தினம், மற்றும் அட்சய திருதி முன்னிட்டு மரக்கன்று நடும் விழா , மாணவர்களுக்கு புத்தகம் வழங்குதல், துணிப்பை வழங்கப்பட்டது. இதில் பொன்மலை படிப்பக மன்ற பகுதியில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடந்தது.

உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக்குடில் விளைவுகள் , தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வனங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு தன் முன்னோரும் தானும் அனுபவித்த இயற்கை வளங்களை பரிசாய் தர முடியும், என தெரிவிக்கும் விதமாக பூமி காக்க பிளாஸ்டிக் கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம் என துணிப்பை கொடுக்கப்பட்டது.

அட்சய திருதி தினத்தில் நிகழ்ந்த எல்லாச் செயல்களும் வளர்ச்சியின் அறிகுறிகள் என்றும், அட்சய திருதியையில் எது செய்தாலும் அது வளரும் என்பதால் மரக்கன்று நடப்பட்டது. புத்தகங்கள் வீட்டை மட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கையையும் அழகாக்கும், வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரின் வாழ்க்கையையும் அழகாக்கும். புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், இந்த உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் இன்று ஒரு புத்தகம் வழங்கப்பட்டது.

உலக பூமி தினத்திற்கு துணிப்பை, அட்சய திருதியிற்கு மரக்கன்றுகள், உலக புத்தகம் தினத்திற்கு புத்தகங்கள் வழங்கி முன்று தினங்களையும் கொண்டாட்டப்பட்டது. நிகழ்வுவிற்கு தண்ணீர் அமைப்பு இணை செயலாளர் ஆர்.கே.ராஜா, சாமி தற்காப்பு கலைக்கூடம் ஆசிரியர் டி.ஜீவானந்தம், மக்கள் சக்தி இயக்க நரேஷ், வெங்கடேஷ், சீனிவாசன், தியாகராஜன், செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்
