தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சுலைமான் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
முஸ்லீம் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதை எதிர்த்தும், முஸ்லிம்கள் பாதுகாப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் மூட பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி சிறுகனூரில் 5ம் தேதி “பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு” நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்தலின் போது யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இஸ்லாமிய மக்கள் சரியான நிலைப்பாட்டில் உள்ளனர். ஒரு அமைப்பு சொல்லித்தான் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இல்லை.
பேனா உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் அரசின் பணம் வீணடிக்கப்படக்கூடாது, பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதால் மக்களுக்கு லாபமும், நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் நன்மை கிடைக்கலாம் அதற்கு மாற்றாக கல்விச்சாலைகளை உருவாக்கலாம், மக்கள் அறிவை வளர்க்கக்கூடிய பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தலாம். இதுபோன்று நினைவுச் சின்னங்கள் வைப்பதனால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றார்.