திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மனைவி சத்யா. தம்பதிகள் இருவருக்கும் இடையே எழுந்த கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்தநிலையில் கடந்த 1 வருடமாக சந்துருவின் மச்சினான திருவானைக்காவல் களஞ்சியத் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் சந்துருவின் மனைவி சத்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சந்துரு தனது மனைவி சத்யாவை கண்டித்ததுடன் சிவகுமாருடன் இனி தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது, பேசக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். அதேபோன்று சிவகுமாரையும் கண்டித்தாக கூறப்படுகிறது. ஆனால் சத்யாவும் சிவகுமாரும் இதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் தனது செல்போனில் சத்யாவுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு அரிவாளுடன் வந்த சந்துரு என் மனைவியை வைத்திருக்காயா என திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் சிவகுமாரை ஓட ஓட துரத்தி வெட்டினார்.

கையில் அரிவாளுடன் சந்துரு சென்றதால் பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடிக்க பயந்தனர்.அப்போது அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் இதனை படம் பிடித்துள்ளார். ஆயினும் தைரியமாக இருந்த இளைஞர்கள் சிலர் சந்த்ருவை மடக்கி பிடித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *