தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் ராஜாமணி கூறுகையில்:

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் முடங்கி உள்ளதால் தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அத்துணை பணிகளும் தொடர்ந்து தடையின்றி நடைபெற கோரி லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரியும் நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சரிடம் நேரில் சென்று மனு கொடுத்தோம். அவர்கள் 10.1.22ஆம் அன்று தமிழகம் முழுவதும் 16லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டிகளும் இயங்கும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதுதொடர்பாக இன்று பொதுப்பணித் துறை அதிகாரி சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இம்மாதம் 30ம் தேதிக்குள் குவாரிகள் செயல்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் 4.4.2022 அன்று முற்றுகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *