திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று அளித்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் ஊராட்சி 4-வது வார்டு மன்ற உறுப்பினர் வளர்மதி மணிகண்டன் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் ஊராட்சி 4வது வார்டு மாமன்ற உறுப்பினராக கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்மதி மணிகண்டன் ஆகிய நான் மக்கள் பணி செய்து வருகிறேன். எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன சிமெண்ட் சாலை தெரு மின்விளக்கு, மயானம் எரிமேடை, மயான அமரும் கூடம், மயானம் செல்லும் பாதை போன்றவற்றை அமைத்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பஞ்சாயத்து தலைவர் எந்த வித ஒரு அடிப்படை வசதியும் செய்து தர மறுத்து வருகிறார் மேலும் இப்பகுதிகளில் உள்ள இருள் சூழ்ந்த பகுதிகளில் தெரு மின்விளக்கு அமைத்து தரவும் மறுத்து வருகிறார்.
மேலும் எனது வார்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை ஜாதி பாகுபாட்டோடு கடந்த மூன்று ஆண்டு காலமாக எந்த ஒரு அரச திட்டத்தில் வரக்கூடிய நிதியையும் பயன்படுத்தாமல் ஜாதி பாகு பாட்டோடு செயல்படுகிறார். எனவே எனது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றித் தரக் கோரியும் அதற்கு தடை செய்யும் பஞ்சாயத்து தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி மன்ற உறுப்பினர் வளர்மதி கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார்.