பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் மண்டல் சார்பில் மண்டல தலைவர் குரு தலைமையில் SIT அருகில் உள்ள டாஸ்மாக் அருகிலும், அம்பிகாபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும்,பொன்மலை அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும் மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட அரசு தொடர்பு தலைவர் கண்ணன் , மாவட்ட கலாச்சார பிரிவு செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முக வடிவேல்,மண்டல் துணைத்தலைவர் வையாபுரி,மண்டல் பொதுச்செயலாளர் சுரேஷ்,மண்டல் செயலாளர் முருகேசன் மற்றும் மண்டல் பொருளாளர் மகேஷ் ஆகிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கண்டணத்தை தெரிவித்தனர்