மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தலைமை தாங்கினார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் , மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ள பணிகள் குறித்தும் , ஊட்டச்சத்து குறைபாட்டை குறைத்திடும் நோக்கத்தில் போஷன் அபியான் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மத்திய அரசுத் திட்டத்தில் வேளாண்மைத்துறை , தோட்டக்கலைத்துறை , வேளாண் பொறியியல் துறை , மின் தேசிய வோளண் சந்தை மற்றும் நகராட்சிகள் , பேரூராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் , அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் பிரதம மந்திரி ஆஜாஸ் யோஜனா திட்டம் குறித்தும் தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் , தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் . ஒவ்வொரு கிராமத்திற்கும் பொது சேவை மையம் மூலம் பொது இணைய சேவை வழங்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் , நில அளவைத் ஆவணங்களை நவீனமயமாக்கல் திட்டம் குறித்தும் , தேசிய நலக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது . மேலும் , திருச்சி மாவட்டத்தில் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ,

பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் , பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் , தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனி நபர் இல்லக் கழிப்பறை பணிகள் குறித்தும் , அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங் கும் தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம் குறித்தும் , பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விபரம் குறித்தும் . பிரதமமந்திரி ஆதார்ஷ் கிராம யோஜனா தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மதிய உணவுத் திட்டம் , பிரதம மந்திரி கனிச் ஷேத்ரா கல்யாண் யோஜனா , ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் , பிரதமமந்திரி கவுசல் விகாஷ் யோஜனா , சுகம்யா பாரத் அபியான் , பெண் குழந்தையை பாதுகாப்போம் , பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் , மாவட்ட தொழில் மையம் , தொலைத் தொடர்பு அஞ்சல் துறை , இரயில்வே . நெடுஞ்சாலைத் துறை , உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் ஆய்வு செய்தார் . ஆய்வுக் இந்த கூட்டத்தில் , மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன் , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் , மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்