திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், ‘மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க கூடாது’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி ரயில் நிலையம் அருகே நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் இன்று எஸ்.ஆர்.எம்.யூ சங்கப் பொதுச்செயலாளர் கண்ணையா, துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன், உட்பட 800 க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் கண்ணையா :-

மத்திய அரசு தனியார் மயம் என்று சொல்லாமல் தனியார் மயத்தை கொண்டு வந்து வருகின்றனர். இதுவரை 100 ரயில்களை தனியாருக்கு வழங்கி உள்ளனர். இருக்கின்ற 156 ரயில் நிலையங்களையும் திருச்சி உட்பட ரயில் நிலையங்களை தனியாருக்கு கொடுப்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளனர். இது மக்களுக்கு எதிராக உள்ளன. தற்போது நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டம் அரசியல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படவில்லை, பொது மக்களின் நலனுக்காகவும், மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காகவும் தான் நடைபெற்று வருகிறது.மத்திய அரசு உரிய தீர்வு காணவில்லை என்றால் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *