திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் உமா ரவிராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கலந்து கொண்டார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில்… நாடு முழுவதும் மகளிர் அணியின் பணிகளை வேகபடுத்த வேண்டும். புதிதாக பல்வேறு தரப்புகளை சேர்ந்த மகளிரை கட்சியின் பணிக்கு அழைத்து வரவேண்டும். ஏற்கனவே அமைப்பு ரீதியாக பலமாக இருக்கக்கூடிய மாநிலங்கள் மாவட்டங்களில் இருக்கக்கூடிய சட்டமன்றத் தொகுதி, பாராளுமன்ற தொகுதிகளில் மகளிர் மாநாடு நடத்துவது. புதிதாக வாக்காளராக இணை இருக்கின்ற, முதல்முறையாக வாக்களிக்கின்ற இளம் பெண்களை பாஜக செயல்பாட்டில் அதிகமாக இணைத்து கொள்வதற்கு கட்சி ரீதியே தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்த மகளிர் அணி சார்பாக திட்டமிட்டு உள்ளோம். பிப்ரவரி மாதம் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும் இணைந்திருக்க கூடிய பலன் பெற்று இருக்கக்கூடிய பெண் பயனாளிகளை சந்தித்து அவர்களிடம், அந்தத் திட்டத்தை பற்றியும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை எவ்வாறு மகளிருடைய மேம்பாட்டிற்காக செயல் படுத்துகிறார் என்பதைப் பற்றியும் அவர்களிடம் உரையாடிவிட்டு அவர்கள் அனுமதியோடு செல்பி எடுத்து அதை நமோ ஆப் என்கின்ற செயலியில் பதிவேற்றம் செய்வதற்கான ஒரு நிகழ்வை தொடங்கினோம். வருகின்ற டிசம்பர் மாதம் வரை நடைபெறக்கூடிய அந்த செல்பி( மகளிர் பயனாளிகளுடன் செல்பி எடுத்தல்) ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் 20 ஆயிரம் பெண் பயனாளிகளை சந்தித்து அவர்களுடன் செல்பி எடுத்து நமோ ஆப் இல் அப்லோட் பண்ண வேண்டும் என்ற லட்சியத்தை பத்தி செயலாற்ற தொடங்கினோம். தமிழ்நாட்டிலே அதிகப்படியாக செல்பிகள் எடுத்து அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழகம் வந்திருக்கிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள மகளிரணி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த வகையில் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், தென்காசி ,திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் எல்லாம் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு அந்த இலக்கினை அடைந்திருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பெண் பயனாளிகளிடம் சந்திக்கும்போது நிறைய பேருக்கு இது மத்திய அரசினுடைய திட்டம் என்பது பற்றி சொல்வதற்கும் பிரதமர் மோடி பெண்கள் மீது வைத்திருக்கின்ற அக்கறை பற்றி சொல்வதற்கு எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. மிகப் பரவலாக வேகமாக நடைபெற்று வரும் இந்த பணி வரக்கூடிய காலங்களில் மற்ற பாராளுமன்ற தொகுதிகளிலும் வேகமாக்கப்படும். இவையில்லாமல் மகளிர் அணி சார்பாக அகில இந்திய அளவிலே 15 முக்கியமான மத்திய அரசினுடைய திட்டங்களை பற்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு திட்டத்தினுடைய பெயர் நமக்கு தெரிகிறது ஆனால் அந்த திட்டத்தை எப்படி எடுத்துக் கொள்வது பற்றிய பயிற்சி முகாம்கள்..15 மணி நேரம் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இந்த பயிற்சி முடித்ததற்கு பின் தேர்வு நடத்தி ஈ-சர்டிவிகேட் வழங்கப்படுகிறது. ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 200 பேர் என்று இலக்கிலே தமிழகத்திலேயும் நல்ல எண்ணிக்கையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் மகளிர் அணி சார்ந்தவர்கள்..

இதன் வாயிலாக ஒவ்வொரு திட்டத்திற்கும் யார் அதிகாரி, அவரிடம் எந்த ஆவணங்களை சமர்ப்பிப்பது, எம்மாதிரியான ஆவணங்களை தயார் செய்ய வேண்டும், அந்த அதிகாரியிடம் சென்று பேசுவது என்று களத்திலே தங்களை சுற்றி இருக்கக்கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்வதன் வாயிலாக உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இவை இல்லாமல் ஒரு மாதத்திற்கு இரண்டு நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த இரண்டு நாளும் ஒவ்வொரு பூத் களிலேயும் குறைந்தது 100 இல் இருந்து 150 வீடுகளுக்கு நேரடியாக மகளிரணியினர் சென்று மத்திய அரசினுடைய திட்டங்களை பற்றியும் தமிழகத்திற்கு ஏன் பாரதிய ஜனதா கட்சி தேவை என்பது பற்றியும் விளக்கி கூற இருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் முதல் மாதத்தில் இரண்டு நாள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது என்ற முடிவையும் மகளிர் அணி எடுத்திருக்கிறது. இவையில்லாமல் தமிழகம் சார்ந்த இருக்கக்கூடிய பிரச்சனைகள் தமிழகத்திலேயே பெண்களுக்கு இருக்கக்கூடிய பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள், வேறு விதமான சமூகப் பிரச்சனைகள் போன்றவற்றை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் உதவி கரம் ஏற்றுவதில் பாஜக மகளிரணி முன்னணியில் இருக்கிறது. பல்வேறு போராட்டங்களை மகளிரணியினுடைய தலைவர் முன்னெடுத்து இருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவுக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கிறது. இன்னும் வரும் காலங்களில் மகளிர் அணியின் செயல்பாடு ஒவ்வொரு மண்டலங்களையும் நோக்கியும், இன்னும் வேகமாக செயல்படும். வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு என கடுமையாக வேலை பார்ப்பதற்கு 66 மாவட்டங்களிலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு எங்கள் சுயநல குழுக்களை சந்திப்பது, அவர்களுக்கு உதவி செய்வது, மகளிர் தாங்கும் இடங்களில் உள்ள மகளிரத்து தேவையான உதவிகளை செய்ய ஒரு குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தங்களுடைய பணியை விரிவுபடுத்தி இருக்கின்றனர். அதைப் பற்றிய முழுமையான திட்டமிடல், இதற்கென்று தனி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அதனுடைய துவக்கமாகவும் இந்த மகளிரணி செயற்குழுவை எடுத்துக் கொள்ளலாம்.

சிலிண்டர் விலை குறைப்பது குறித்த கேள்விக்கு?? கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசாங்கத்தை பொருத்தவரை 2014 ஆண்டுக்கு முன்பு சிலிண்டர் விலை 1000- தாண்டியது. பின்பு பல்வேறு காலகட்டங்களில் சிலிண்டர் விலை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப சில சமயம் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது மேலும் அதற்கும் குறைவாக குறைந்து இருக்கிறது. ஏனென்றால் பெட்ரோல் எரி பொருட்கள் நம் நாட்டில் உற்பத்தியாகுவதில்லை. வெளியில் இருந்து வரக்கூடிய பொருட்கள் சர்வதேச சந்தையில் இருக்கக்கூடிய நிலவரத்தைப் பொறுத்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்துதான் அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது நடந்து இருக்க கூடிய விலை குறைப்பு என்பது அதிகமான விலை குறைப்பு. தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் 200 குறைத்தது மிகப்பெரிய ஒரு சாதனையாகும். முக்கியமான விஷயத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் 2014 வரை இருக்கின்ற கேஸ் இணைப்புகள் எத்தனை. கிட்டத்தட்ட 14 கோடி இணைப்புகள் இருந்ததை தற்போது கூடுதலாக 10 கோடி இணைப்புகளை ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 10 கோடி ஏழை பெண்களுக்கு புதிதாக கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளுக்கு கூடுதலாக 200 ரூபாய் மானியம் கொடுக்கிறோம். இந்த அறிவிப்பு தேர்தல் காலத்தில் அறிவித்த தேர்தல் வாக்குறுதி அல்ல தேர்தலுக்காக அறிவித்தது அல்ல ஏழைப் பெண்களின் வாழ்க்கை மேம்படுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என அறிவித்த திமுக அரசு 2 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசு, இந்த அறிவிப்பை குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. பெண்களைப் பற்றி அக்கறை இருக்கக்கூடிய ஒரே அரசு பிரதமர் மோடி அரசு ஆகும். தேர்தல் நேரத்தில் எல்லா பெண்களுக்கும் பணம் கொடுக்கிறோம் சிலிண்டருக்கு 100 ரூபாய் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, தற்போது வேறு காரணத்தை கூறிவிட்டு எல்லா பணத்தையும் பதுக்கி கொள்வது அல்ல பாஜக அரசு. நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு யார் யாருக்கெல்லாம் மானியம் வேண்டாம் என தானாக முன்வந்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் எங்களுக்கு மானியம் வேண்டாம் என தாமாக முன்வந்து தெரிவித்தனர். சுதந்திர இந்தியாவின் பிரதமர் மோடி ஏழை எளிய பெண்களுக்கு அதிக அளவில் சிலிண்டர் இணைப்புகளை கொடுத்து வருகிறார். தயவுசெய்து பாஜக – காங்கிரசை ஒப்பிடாதீர்கள் , ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பெண்கள் புதிதாக கேஸ் இணைப்பை பெற்றுள்ளார்கள். பெட்ரோல், டீசல் விலையை GST கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் அதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தால் கணிசமாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை ஆண்டுகளுக்கு நாம் வெளிநாட்டில் இருக்கக்கூடிய எரிபொருளை நம்பிக் கொண்டிருக்க முடியும் அதற்கு மாற்று வழியை நாம் உருவாக்க வேண்டும். எத்தனால், சோலார் போன்ற மாற்று எரிபொருளை நோக்கி நாம் செல்ல வேண்டும். குடும்ப ஆட்சி நடத்துகின்ற, ஊழல் கறை படிந்த அத்தனை பேரும் ஒரே மேடையில் அமர்ந்து, நேர்மையாக திறமையாக ஆட்சி நடத்தக்கூடிய மோடி அவர்களுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கப் போவதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்தை மக்கள் முன்பாக வைக்கிறோம். இது குறித்து குலுக்கல் அமைக்கப்பட்டு பல்வேறு கருத்துகளைக் கொண்டு விவாதிக்கப்படும். இதனால் நன்மை என்ன, தீமை என்ன, சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். தேர்தல் சீர்திருத்தம் என்பது இந்நாட்டிற்கு மிக அவசியம். தமிழகத்தில் யார் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார்கள் மற்றும் வேட்பாளர்கள் பெயர்களை மத்தியில் இருக்கக்கூடிய பாஜக தேர்தல் குழு அறிவிக்கும். தமிழ்நாட்டில் மோடி அவர்கள் போட்டியிட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம், மக்களும் விரும்புகிறார்கள் ஆனால் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ காத்திருந்து பார்ப்போம்.

இந்திய என்ற கூட்டணி பெயரை கேட்டாலே பாஜகவிற்கு காய்ச்சல் , பயம் , வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார் ? ஸ்டாலின் அவர்கள் ஊர் ஊராக சென்று காய்ச்சல் வந்தது போல் பிதட்டிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சிக்கு வந்த நாங்கள், பல்வேறு மாநிலங்களில் பொய் பிரச்சாரங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளோம். மாநிலத்தின் முதல்வருக்கு தான் ஒவ்வொரு மாநிலமாக செல்லும்போது காய்ச்சல் வருகிறது, எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி யார் யார் உள்ளார்கள் என்பதை அவர்களே கூட்டம் போட்டு காண்பித்துள்ளார்கள். மேலும் இன்னும் புதிதாக பாஜகவில் சில கட்சிகள் வந்து இணைய வாய்ப்புகள் உள்ளது. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக சென்று அடைந்திருக்கு பாரத பிரதமரின் பங்கு அதிகம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *