திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தனது கூறுகையில் :-

வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பதில் 917 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இப் பல்கலைக் கழகத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 2,500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 30 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை உயர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இங்குள்ள விடுதியில் 1900 மாணவர்கள் தங்கி பயில்கின்றனர். முதுகலை படிக்க 20,000 ம் என குறைவான கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று விடுதிக்கு மாதத்திற்கு 3000 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை தமிழக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எக்னாமிக்ஸ், காமர்ஸ் உள்ளிட்ட 27 துறைகளின் கீழ் 64 வகையான பாடப்பிரிவுகள் உள்ளது.இவ்வாண்டு foreign language உள்ளிட்ட ஐந்தாண்டு கால நான்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டம் வாயிலாக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழக முழுவதும் வழங்கப்பட உள்ளது.

அத்தகைய பயிற்சியினை ஆண்டுதோறும் 150 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் நேரடியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை திருச்சியில் துவங்க, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே 5 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது. இந்தாண்டுக்குள் பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்