இந்திய கண சங்கம் கட்சி சார்பில் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய இருபத்தைந்தாம் ஆண்டு விழா, தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய கண சங்கம் கட்சியின் 6ம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது..

இந்த விழாவிற்க்கு கணசங்கம் கட்சியின் பொது செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் துரைசாமி முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆளுமை விருது வழங்கப்பட்டது இதில் மாவீரன் அசோகர் விருது, ஜான்சி ராணி விருது, அம்பேத்கர் விருது, நாராயண குரு விருது, தந்தைபெரியார் விருது உள்ளிட்ட விருதுகளை இந்திய கண சங்கம் கட்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர். முத்துசாமி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிறுவனத் தலைவர் பேராசிரியர்.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

வருகிற டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளின் 3 வேளாண் சட்டங்கள், நீட், சிஏஏ உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநில அரசுக்கு எஸ், ஓபிசிக்கு உரிய சமூக நீதி வழங்க கோரியும், நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், ஒய்வு பெரும் வயது 55 ஆக ஆக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.