சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முரளி மாவட்ட துணைத் தலைவர், பேட்டரிக் ராஜ்குமார் பொதுக்குழு உறுப்பினர்’ சிவகாம சுந்தரி சிருகமணி பேரூராட்சி தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர்’ மகேந்திரன் உறையூர் சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.