இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களின் முக்கியத்துவம், வலிமை, பாதுகாப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) ஆகியவை இணைந்து 120பெண் மத்திய ரிசர்வ் காவல்படை(CRPF) விராங்கனைகள் வாகன விழிப்புணர்வு பேரணி கடந்த ஐந்தாம் தேதி கன்னியாகுமரியல் இரண்டு புறப்பட்டு இம்மாதம் 30ஆம் தேதி குஜராத்தில் முடிவடைய உள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சிக்கு வந்து குழுவினரை உற்சாகப்படுத்தும் விதமாக திருச்சியிலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து வரவேற்று வழியனுப்பும் நிகழ்ச்சி இன்று ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.

இதில் தலைமை சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை ஆணையர் காமினி, கலந்துகொண்டு வரவேற்றார்கள். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்டம் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு உற்சாகப் படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி திட்ட சேர்மன் ஸ்ரீநிவாசன், ரோட்டரி மாவட்ட திட்டங்கள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் கேசவன், ஜோசப் கண்மருத்துவமனை மக்கள் செய்தி தொடர்பாளர் சுபாபிரபு மற்றும் திருச்சியிலுள்ள அனைத்து ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், உதவி ஆளுநர்கள், தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்குபெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *