சென்னையை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் மனைவி வெண்ணிலாவுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்து உடல் நல குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மனைவி வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட கணவன் ராம்பிரகாஷ் துக்கம் தாங்காமல் என் மனைவி இறந்த இடத்திற்கே நானும் செல்கிறேன் என கதறியபடி அங்கிருந்து வேகமாக வெளியே செல்ல முயன்றார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை தடுக்க முயற்சி செய்தனர் அவர்களை அங்கிருந்து தள்ளிவிட்டு வேகமாக வெளியே சென்றார்.

இந்நிலையில் திருச்சி கரூர் ரயில்வே மேம்பாலம் அடியில் உள்ள தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சம்பவ இட வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது பெயிண்டர் ராம்குமார் என தெரிய வந்தது. உடனடியாக ராம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *