திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பரமசிவம் வயது( 70 ). இவரது மனைவி சரஸ்வதி வயது(65).இவர்கள் இருவரும் மகன் சதாசிவம் என்பவர் பராமரிப்பில் இருந்துள்ளனர். பரமசிவத்திற்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சற்று உடல் நலம் தேறி இருந்த நிலையில் நேற்று மனைவி சரஸ்வதி தொட்டியம் பால சமுத்திரத்தில் உள்ள வீட்டில் மாரடைப்பு காரணமாக காலை இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்தவுடன் பரமசிவத்துடன் இருந்து அவரை கவனித்து வந்த உறவினர்கள் பரமசிவத்தை பாலசமுத்திரத்திற்கு அழைத்து வந்தனர்.துக்க நிகழ்வுக்காக வந்திருந்தவர்கள் மனைவி இறந்தது குறித்து பரமசிவத்திடம் விசாரித்து சென்று கொண்டிருந்தனர். சரஸ்வதியின் இறுதி ஊர்வலத்திற்கு சடங்குகள் துவங்கியது. அப்போது மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட பரமசிவம் திடீரென வாசலில் சுருண்டு விழுந்தார்.உறவினர்கள் ஓடிச்சென்று அவரை பார்த்தபோது அவர் உடலில் இருந்து உயிர் பிரிந்திருந்தது. இதனை பார்த்த உறவினர்கள் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். இருவரையும் ஒரே நேரத்தில் இடுகாட்டுக்கு இரு வாகனங்களில் எடுத்துச் சென்று இறுதி சடங்கை செய்தனர்.மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்