தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கல ராஜின் 12 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜென்னி ப்ளாசா வளாகத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ், மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் சரவணன், ஜி.கே.முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனிவாசன், கள்ளிக்குடி சுந்தரம், முன்னாள் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஹேமா முல்லை ராஜன்,முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் மாலைய அணிவித்து மரியாதை செலுத்தினர்