மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் , 2011 -ல் 9 அடி உயர சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது. அவரது சிலை அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக இருந்தது. இதற்கிடையில்,சிலையை திறக்க வேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன் றத்தில் திருச்சியை சேர்ந்த மோகன் பாலாஜி என்ற ரசிகர் தொடர்ந்த வழக்கில்,

நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சிலை நிறு வப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித் துள்ளது. மதுரை உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவில், சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக் கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளது. எனவே, திருச்சி யில், வேறொரு முக்கிய சந்திப்பில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிவாஜி கணேசன் சிலையை இன்று வைக்கலாம் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் இன்று இனிகோ இருதராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று பாலக்கரையில் மூடப்பட்டிருக்கும் சிவாஜி சிலையை பார்வையிட்டார். அருகில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜன், மண்டலக்குழுத் தலைவர் ஜெயநிர்மலா, திமுக. பகுதி செயலாளர் டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முகம்மது, வட்டச் செயலாளர்கள் எடிங்டன், சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *