அதிமுக திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மரக்கடை பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் எம்பி ரத்தினவேல் திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் அதிமுக காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளர் சுரேஷ் குப்தா வரவேற்றார்.திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், இறுதியாக வட்டக் கழக செயலாளர்கள் தாமோதரன், சையது ரபீ, வைத்தியலிங்கம், தியாகராஜன் ஆகியோர் நன்றி கூறினர்.

 அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது…அதிமுக கட்சி என்றும் மக்கள் குடும்பம் அதை பிரிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இரட்டை இலை மக்கள் சின்னம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் வெற்றி பெற செய்து திமுகவை விரட்டியடிப்பார்கள்.தமிழக மக்களையும், அதிமுக கட்சியையும் வழிநடத்த தெரிந்த ஒரு நல்ல தலைவர் எடப்பாடி பழனிசாமி. சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது அனைத்தும் பொய். மட்டமான திட்டங்களை செயல்படுத்துகின்றனர் திமுகவினர்.

பொய்யான பல கம்பி கட்டும் கதைகளை சொல்லி ஆட்சியைப் பிடித்துள்ளனர். திமுக வாரிசு கூட்டத்தால் இயங்கும் கட்சி. அதிமுக பட்ஜெட் தாக்கல் செய்தால் தமிழகமே திரும்பிப் பார்க்கும். அதில் மக்கள் நலத்திட்டங்கள் அதிகம் இருக்கும். ஆனால் திமுக தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஊழல் மட்டும் தான் இருக்கிறது. தமிழகத்தில் கடலை மிட்டாய் போல் இப்போது கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

 அதற்கு ஆதரவாக திமுக அரசு உள்ளது. போலீசுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சியை நடத்துகிறது திமுக. தமிழகம் வந்த பிரதமர் மோடி அதிமுக செய்த சாதனைகளை கூறி பாஜவிற்கு வாக்கு சேகரிக்கிறார். அண்ணாமலைக்கு அது கூட தெரியவில்லை அவர் கத்துக்குட்டி. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *