அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதே போல திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ஆம்.ஜி.ஆர்-ன் திருவுருவ சிலைக்கு அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், அதிமுக நிர்வாகி சீனிவாசன், பகுதி செயலாளர்கள் முஸ்தபா, அன்பழகன், , சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ்பாண்டியன் மற்றும் மாநகர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *