தமிழக மக்கள் அனைவரின் இதயங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார்.

அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், நிர்வாகிகள் வனிதா, இன்ஜினியர் கார்த்திகேயன், மரியம் ஆசீக், பூபதி, அன்பழகன். கே.டி. அம்புரோஸ், கவுன்சிலர் அம்பிகாபதி, அரவிந்த் உள்பட பலர் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பார்வையற்றோர் பெண்கள் பள்ளியில் அதிமுக பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு மதிய உணவை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *