சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இன்று மலேசியா கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்,
இப்பொழுது சந்தேகத்திற்கிடமாக வந்த பயணிகள் 3 பேரை சோதனை செய்தபோது அவர்களது மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 85 லட்சத்து 62 ஆயிரத்து 445 மதிப்புள்ள 3 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர் பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.