பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் பிரச்சார பிரிவு சார்பாக திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் ட சாலைகளை விரைவில் சீரமைக்கக் கோரி திருச்சி மாநகராட்சியை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோ அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகம் முன்பாக பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதித்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் மேலும் மழை பெய்து சாலையில் மழைநீர் சூழ்ந்தால் சாலையில் உள்ள குழிகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விடுகின்றனர்.

மேலும் தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களான மலேரியா டெங்கு போன்ற நோய்கள் சிறுவர்-சிறுமிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்திகோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை பாஜகவின் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆகவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் I வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி உதவி ஆணையர் செல்வகுமார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் போராட்டக்காரர்கள் மாநகராட்சி ஆணையாளர் பதில் அளித்தால் மட்டுமே கலந்து செல்வதாக உறுதியாக கூறினர்.

இந்த போராட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி. முரளிதரன், மாவட்ட துணைத் தலைவர்கள் இந்திரன், சிட்டிபாபு, மகளிர் அணி மாவட்ட தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட செயலாளர்கள் கள்ளிக்குடி ராஜேந்திரன், எம்பயர் கணேசன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீராம் ,காளீஸ்வரன், கெளதம் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர், பார்த்திபன் ,வர்த்தக அணி மாவட்ட தலைவர் ராம்குமார், சுவேந்திரன், வெங்கடேசன்,, பிரச்சார பிரிவு மண்டல் தலைவர் ராஜா, மண்டல் தலைவர்கள் பரஞ்ஜோதி, தர்மராஜ், சதீஷ்குமார், பிரச்சார பிரிவு தலைவர் நாகேந்திரன், ஒண்டி முத்து , மாவட்ட செயலாளர் அரசு நேதாஜி மல்லி செல்வம்,,கௌதம் நாகராஜன், சந்தோஷ்குமார், வக்கீல் கார்த்திகேயை,உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.