திருச்சி மாவட்ட நீதிமன்ற அருகே தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள், தீத்தடுப்புக்குழு, திருச்சி தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாற்றம் அமைப்பு ஒயிட்ரோஸ் பொதுநலச் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து “மாசு இல்லா தீபாவளி விபத்தில்லா தீபாவளி” என்கிற பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொதுநல நடமாடும் தயார் நிலை இலவச முதல் உதவி சேவையாளரும் ரயில்வே ஊழியறுமான Dr.சீனிவாச பிரசாத் அவர்களின் 27 ம் ஆண்டு 2 சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் தீ விபத்துக்களைத் எப்படி தவிர்பது, குழந்தைகள் பாதுகாப்பாக வெடிகளை எப்படி வெடிக்க வேண்டும், காற்று மாசை தடுத்து சுற்றுச்சூழலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு எடுத்து கூறி பேருந்து மற்றும் வாகனங்களில் வந்த பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கி விபத்துகளை எப்படி தவிர்பது என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒயிட்ரோஸ் பொதுநல சங்கத்தின் தலைவர் சங்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினார் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் நடிகருமான ஆர்.ஏ. தாமஸ் வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி மாவட்ட தீயனைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை கோட்ட உதவி தீ தடுப்பு மீட்பு அதிகாரி கருனாகரன் (ADFO) Fire அவர்கள் கலந்து கொண்டு விபத்துப்பற்றிய பிரச்சாரத்தை தொடக்கிவைத்தார் தீயனைப்புதுறை அதிகாரிகள் பணியாளர்கள் இணைந்து பிரச்சார நோட்டிஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினர் அதனை தொடர்ந்து ரயில்வே ஊழியறும் சமூக ஆர்வலருமான Dr.சீனிவாச பிரசாத் 2நாள் வாகன பிரச்சார பயணத்தை தொங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.