திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் நடந்து முடிந்த திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேலும்
இவர் திருவெறும்பூர் தொகுதியில் 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி அன்றிலிருந்து இன்றுவரை இப்பகுதி மக்களுக்கு அரசின் பல்வேறு நல திட்டங்கள் செய்து கொடுத்துள்ளார்.

அதன் காரணமாகவே 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற 16வது சட்டப்பேரவைத் தேர்தலில் 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2021 மே மாதம் ஏழாம் தேதி பதவியேற்றார்.
பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துடிப்பாகவும், சிறப்பாகவும் செயல்படுட்டு வந்ததின் காரணமாகவே தற்போது அவருக்கு தமிழக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார். மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறையை ஊக்குவித்து பல்வேறு உதவிகளை செய்து திருவரம்பூர் தொகுதியில் மாணவர்களின் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். மேலும் மிகவும் துடிப்பான இளைஞர் என்ற நற்பெயரைப் முதல்வர் ஸ்டாலினிடம் பெற்றவர். அதனால் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை கையில் எடுத்துள்ளார். வருங்கால மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை காண்பார் என்றே இவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்