திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சிகளில் வசிக்கும் ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பர்மா காலனி, திருவளர்ச்சி பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த ஊராட்சியின் துணைத்தலைவர் பூமாதேவி செந்தில்குமார் தலைமையில் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இந்த ஊராட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றோம். பெண்களில் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகள். நாங்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பிதான் வாழ்ந்து வருகின்றோம். மிகவும் பின்தங்கிய பகுதியான எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதால், எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் கிராமப்புற திட்டங்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்காது. ஆகவே, குண்டூர் ஊராட்சியை எக்காரணத்தைக் கொண்டும் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது “வேண்டாம் வேண்டாம் மாநகராட்சி வேண்டாம்” என மக்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டு ஊராட்சி கவுன்சிலர்கள் அய்யனார், மாரிமுத்து, கலைச்செல்வி, ஜோதி பாலச்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.