திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிச்சாண்டார்கோவில், தச்சன்குறிச்சி கரியமாணிக்கம் தாளக்குடி ஆகிய ஊர்களில் காட்டில் நடப்போம் என்ற அடர்ந்த காடுகள் மியாவாக்கி முறையில் 5.25 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

இதில் பிச்சாண்டவர் கோவில் ஊராட்சி அருள்மிகு உத்தமர் திருக்கோயில் நிலத்தில்13.30 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 75 ஆயிரம் மரக் கன்றுகளும், தச்சன் குறிச்சி ஊராட்சி அருள்மிகு திருபிரம்பீஸ்வரர் திருக்கோயில் நிலத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 50 ஆயிரம் மரக் கன்றுகளும், முசிறி பேரூராட்சி அருள்மிகு சித்தநாத சுவாமி ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவில் நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகளும், நம்பர் 2 காரியமாணிக்கம் ஊராட்சி அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி கோவில் நிலத்தில் 3.50 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக் கன்றுகளும், பகளவாடி ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் மரக் கன்றுகளும், தாளக்குடி ஊராட்சி அருள்மிகு உத்தமர் திருக்கோயில் நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் என மொத்தம் 39.80 ஏக்கர் பரப்பளவில் 5.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மண்ணச்சநல்லூரில், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூபாய்.307.50 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிவைத்து , அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி வரும் 13ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் மேலும் மாநகராட்சி நகராட்சி விரிவாக்கத்தில் சேர விரும்பாத கிராம ஊராட்சிகள் கட்டாயப்படுத்த படமாட்டாது, மேலும் ஊராட்சிகள் இணைக்கப்பட்டாலும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் முழுதும் இருப்பார்கள். மாநகராட்சி நகராட்சி விரிவாக்கத்தில் சேர விரும்பும் கிராம ஊராட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படும், பாதாள சாக்கடை குடிநீர் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாநகராட்சியில் இணைக்கப்படும் என்று கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் சிவராசு மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீதர் ஒன்றிய குழு துணை தலைவர் செந்தில் துணைத் தலைவர் செல்வி விஜயகுமார் தலைவர் ஷோபனா மற்றும் இணை இயக்குனர் திட்ட இயக்குனர் செயல் பொறியாளர்கள் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்