திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் , ஊராட்சியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கிராம பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனு அளிக்க ஒன்று திரண்டனர் . மாநகராட்சி விரிவாக்க பணிகளை தங்களுடைய ஊரில் தொடங்கக்கூடாது என்றும், திருச்சி மாநகராட்சியில் தங்களது ஊரை இணைக்கக் கூடாது என்றும் .
மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், அரசின் இலவச ஆடு, மாடுகள் கிடைக்காது எனக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க 1000 க்கும் மேற்பட்டோர்ஒன்று திரண்டு வந்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.