மாநில அளவிலான காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol / Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று 19.11.22 ந்தேதி சென்னை அடையாறில் உள்ள மருதம் Commando Force- ல் நடைபெற்றது . இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள் , சரக காவல்துறை துணைத்தலைவர் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயரதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் Pistol / Revolver ஆகியவைகள் ( 15 , 20 , 25 , 30 மீட்டர் ) பிரிவுகளிலும் , INSAS Rifle ( 50 மீட்டர் ) பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன . திருச்சி மாநகர காவல்துறை சார்பில் INSAS Rifle ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் , போட்டிகளில் 5.56 INSAS Rifle ( 50 மீட்டர் ) ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு , போட்டியில் பங்கு பெற்று 26 அதிகாரிகளுக்கிடையேயான முதல் பரிசு வென்று , தங்கம் பதக்கம் வென்றார்கள் . இத்துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு வெற்றி பெற்ற காவல்துறை உயரதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *