அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயளாளரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட முக்குலத்தோர் அமைப்பின் செயலாளரும், திருச்சி மாவட்ட பசும்பொன் முத்துராமலிங்கதேவர் முழு உருவ வெண்கல சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு குழு தலைவருமான வெங்கடேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து கூறி கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மனிதம் சமூக பணி மையம் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது அருகில் மாவட்ட தலைவர் முருகையா தேவர், இளைஞர் அணி செயலாளர் காஜாமலை கிரி, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் பாலக்கரை பழனிவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் காஜாமலை ஆனந்த்,

நிர்வாகிகள் செல்வகுமார், ஷியாம் சுந்தர், பிரபாகரன் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட துணை செயலாளர் கருப்பையா ஹோட்டல் ராமசாமி மணி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.