டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த அக்-9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு தினங்கள் தஞ்சையில் நடைபெற்றது இப்போட்டியில் திருச்சி ,தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியிலிருந்து 40 க்கும் மேற்பட்ட தடகள விளையாட்டு வீரர்கள் பயிற்ச்சியாளர் முனியாண்டி தலைமையில் போட்டிகளில் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த போட்டியில் வெற்றி பெற்ற தடகள விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல்.

1.கிஷோர் (under20)

1500mts 2nd Place

2.ரோகித்(under16)

100mt1st Place 

300mts 2nd Place

3.சிவதர்ஷனி (under16)

Shotput 1st Place 

4.கலையரசி (under14)

HighJump 3rd place

5.அக்ஸயா(under12)  

50mts 3rd Place

6.சிவரஞ்சனி (under12)

Throw ball 3rd place

7.தமிழகன் (under12)

Throw ball 1st place

உள்ளிட்ட இடங்களை பிடித்தனர் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி கல்லுகுழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் பொன்னாடை அனிவித்து பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திரளான விளையாட்டு வீரர்கள் அவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்